கூசு முனிசாமி வீரப்பன் | |
வீரப்பன் நாமதல்லி காடுகளில் தன் கூட்டத்தினருடன் |
|
பிறப்பு | சனவரி 18, 1952 |
---|---|
இறப்பு | அக்டோபர் 18 2004 |
மற்ற பெயர்கள் | வீரப்பன் |
பணி | யானை வேட்டை சந்தனமரம் கடத்தல் |
வாழ்க்கைத் துணை | வீ.முத்துலட்சுமி |
பிள்ளைகள் | வீ.வித்தியாராணி, வீ.பிரப விஜியாலட்சுமி |
வீரப்பன் (1952 - 2004) சந்தனக்கடத்தல் வீரப்பன் என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். 2004 இல் விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.[1]
சிறப்புகள்
வீரப்பனை எதிர்மறையாக பலர் உணர்ந்தாலும், வீரப்பன் வாழ்ந்த காட்டிற்கு அருகே இருக்கும் கிராம மக்கள் தங்கள் காவல் தெய்வமாக வீரப்பனை பார்த்தார்கள்.பெருஞ்செல்வந்தர்களின் செல்வங்களை முறையற்ற வகையில் களவாடி அதை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்து வாழ்வு நடத்திய ஏழைகளின் பங்களான் எனப்படும் இராபின் ஊட்டின் சாயலில் வீரப்பனின் நடவடிக்கைகள் இருந்ததாலும், சட்டவிரோத செயல்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்க சரனடைய போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டது.
வீரப்பனின் மறைவுக்குப்பின் அளவுக்கு அதிகமாக செல்வங்களை சேமித்து வைத்து இருந்தார் என எந்த செய்தியும் இல்லாத அளவுக்கு அவர் உண்மையிலேயே ஏழைப்பங்காளனாக இருந்திருக்கின்றார்.
நக்கிரன் ஆசிரியர் பல நேரங்களில் வீரப்பனை நேரடியாக சந்தித்து மக்களுக்கு வீரப்பன் பற்றிய செய்திகளை உண்மையாக எழுதினார்.
இவருடைய வரலாறு சந்தனக்காடு என்ற தொடராக இயக்குனர் கவுதமன் அவரகளால் இயக்கப்பட்டு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.
வீரப்பனின் தாக்கத்தால் தமிழக திரைப்படங்களில் பலவும் காட்டிற்குள் வில்லன் இருப்பதைப் போன்று சித்தரித்து வீரப்பனை ஞாபகம் செய்தன. விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்கள் வீரப்பனை காவல்துறை பிடிக்காதது குறித்தான நகைச்சுவையில் ஈடுபட்டார்கள்.
வீரப்பனின் மரணத்திற்கு பின்பே வெகுஜன மக்களுக்கு வீரப்பனின் மகிமை தெரிந்தது. இப்போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இணைத்து வீரப்பனை கொண்டாடுகின்றார்கள். அவர் சமாதிக்கு சென்று பல இயக்கங்கள் வீர வணக்கம் செய்கின்றன.
No comments:
Post a Comment